மாயமாகும் பிள்ளையார் சிலைகள்

317 0
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் தொடர்ந்து பிள்ளையார் சிலைகள் காணாமல் ஆக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறை குமார கோவிலில் உள்ள பிள்ளையார் சிலை அண்மையில் காணாமல் போயிருந்தது

அந்நிலையில், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கு அருகிலுள்ள ஆலயத்தில் இரண்டு பிள்ளையார் சிலைகள் காணாமல் போயுள்ளன.

பிள்ளையார் சிலைகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.