மட்டு ஆரையம்பதியில் இரு கடைகளை உடைத்து 35 கையடக்கதொலைபேசிகள் கொள்ளை

313 0

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் பூட்டியிருந் இரண்டு கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களின் கூரையை உடைத்து சிமாட் கையடக்க தொலைபேசி உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான  35 கையடக்க தொலைபேசிகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.

காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள  தேவாலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள இரண்டு கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை வழமைபோல சம்பவதினமான இரவு கடை உரிமையாளர்கள் பூட்டிவிட்டு வீடு சென்று இன்று வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறந்தபோது கடையின் கூரையை உடைத்து கடைகளுக்குள் கொள்ளையர்கள் இறங்கி அங்கிருந்த சிமாட் வகை கையடக்க தொலைபேசிகள் உட்பட 35 கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இனையடுத்து காத்தான்குடி காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்ஸ்பெக்டர் வை. விஜயராஜ தலைமையிலான காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அங்கு  பொருத்தப்பட்ட சிசிரி கமராவை சோதனையிட்டு விசாரணைனளை மேற்கொண்டுவருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.