யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் காணிகளைக் கொடுத்து டொலர் பெற அரசு முயற்சி!!

290 0

கொழும்பு உட்பட நாட்டின் முக்கியமான பிரதேசங்களில் உள்ள சுமார் 50 காணிகளை அபிவிருத்தித் திட்டங்களுக்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 6 பில்லியன் அமெரிக்கா டொலர் மதிப்பிலான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரையப்பட்டுள்ளன என்று சிங்கள மொழி ஊடகமான அத தெரண தெரிவித்துள்ளது.

கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி, போகம்பரை, நுவரெலியா, குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா, மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களில் உள்ள காணிகளும் இதில் அடங்கும்.

சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஈ), இந்தியா, மலேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும், உள்ளூர் முதலீட்டாளர்களும் ஏற்கனவே திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.

தற்போது இலங்கை அரசு எதிர்கொண்டு வரும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவே காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது என்று கூறப்படுகின்றது.