தொண்டைமானாறில் கரையொதுங்கிய மனித உடல் எச்சங்கள்!!

180 0

தொண்டைமானாறு, சின்னமலை ஏற்றப் பகுதியில் கரையொதுங்கிய உருக்குநிலைந்த மனித உடல் எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

வல்லெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று மாலை அவை மீட்கப்பட்டுள்ளன.

மனிதக் கால்களின் எலும்பு மீட்கப்பட்டுள்ளது என்றும், மீட்கப்பட்ட மனித உடல் எச்சம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, அண்மைய நாள்களில் வடமராட்சி கடற்கரைப் பகுதிகளில் உருக்குநிலைந்த மனித உடல்கள் கரையொதுங்கியிருந்தன.