நாட்டில் பரவி வரும் ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் விளைவுகளை குறைக்க, கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெறுவது அவசியம் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது டோஸைப் பெறுவது கொவிட் -19 தொற்றால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஒமிக்ரோன் பிறழ்வானது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கைக்குள் வராது என்பதற்கு 100% உத்தரவாதம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது டோஸைப் பெறுவது தனிநபரின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது வைரஸ் பரவும் அபாயத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

