வடக்கு அபிவிருத்தி நிா்வாகத்தை துாிதமாக முன்னெடுக்க நாளை செவ்வாய்க்கிழமை ஆளுநா் ஜீவன் தலைமையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. மத்தியின் அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய அபிவிருத்தி , நிா்வாகம், திட்டமிடல் மற்றும் அரசாங்க சேவையில் தேக்கநிலையில் உள்ள செயல் திட்டங்களை துாிதமாக முன்னெடுக்கும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநா் ஜீவன் தியாகராஜா தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்கு குழு விசேடமாக கூட்டப்படவுள்ளது.
நாளை 14.12.2021 செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள மாகாண கட்டடிடத்தில் வடமாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் விசேடமாக இடம்பெறவுள்ளது.
இவ் விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாதாந்தம் நடாத்த தீா்மானிக்கப்பட்டுள்ளதுடன் இக்கூட்டத்திற்கு வடமாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் மத்தியின் அமைச்சா், வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினா்கள், மாவட்ட செயலாளா்கள், பிரதம செயலாளா், அமைச்சுக்களின் செயலாளா்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் தலைவா்கள் விசேடமாக அழைக்கப்பட்டுள்ளா்.
வடக்கு மாகாண மட்டத்தில் மாகாணத்திலும், மாவட்டங்களிலும் முன்கொண்டு செல்ல முடியாது தேக்க நிலையில் உள்ள சகல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீா்வுகள் முன்னெடுப்பதனை மையமாக கொண்டே இவ் மாகாண மட்ட கூட்டம் பரந்த அளவில் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2022 இல் இவ் மாகாண கூட்டம் புதுப்பொலிவுடன் அபிவிருத்தி – நிா்வாகத்தை (Development Administration) மையப்படுத்தி சேவைகள் ஒருங்கிணைக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

