சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழப்பு!

270 0

தியத்தலாவ இராணுவ பயிற்சி நிலைய விஞ்ஞான பீடத்தின் பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவரை உடைக்க முற்பட்ட போதே குறித்த அனர்த்தமானது இடம்பெற்றுள்ளது.

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 37 வயதுடைய என்பதுடன், மடுல்சிம பகுதியைச் சேர்ந்தவராவர்.

சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.