யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில், 300 கிலோகிராம் நிறையுடைய கடல் ஆமையுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடல் ஆமையை ஆழ்கடலில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

