கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13ம் தேதி ஆலோசனை

259 0

ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.