42 ஆயிரம் இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

246 0

1266445158Courtயுத்த காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராகவே சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றிக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான அதிகாரம் பொலிஸாரிடமும், குடிவரவு குடியகழ்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 42 ஆயிரத்து 500 இராணுவ வீரர்கள், பொதுமன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது