ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை

210 0

506976115Raviஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மீளவும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் மீளவும் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை.

இதற்கு முன்னதாக எவ்வாறு இலங்கைக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டதோ அதேவிதமாகவே வரிச் சலுகை வழங்கப்படுகின்றது.சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கி வரும் நலன் திட்டங்களை தாங்கிக்கொள்ள முடியாத தரப்பினர் காழ்ப்புணர்ச்சியனால் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

நிபந்தனைகள் எதுவுமின்றி கடன் அல்லது வட்டி என்பனவும் இன்றி நாட்டுக்கு இந்த வரிச் சலுகைத் திட்டத்தின் ஊடாக 300 மில்லியன் டொலர் கிடைக்கும்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வரிச் சலுகைத் திட்டம் கிடைக்காத போது குரல் கொடுக்காதவர்கள், வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கும் போது கூடுதலாக பேசுகின்றனர் என அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கப் பெற்றால் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட நேரிடும். முன்னாள் புலிப் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்த முடியாது, சந்தேக நபர்களை விடுதலை செய்ய நேரிடும் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மஹிந்த தரப்பினர் சுமத்தி வருகின்றனர்.

சுமார் 58 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வரிச் சலுகை வழங்கப்பட உள்ளதாக குற்றம் சுமத்ப்பட்டிருந்தது.