கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்

448 0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வு, இன்று (09), கரைதுறைப்பற்று   பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன்  தலைமையில் நடைபெற்றது

சபையில் 24 உறுப்பினர்கள் இருக்கின்ற போது, நான்கு உறுப்பினர்கள், இன்று, சபைக்கு சமூகமளிக்காத நிலையில் 20 உறுப்பினர்கள்  சமூகமளித்தனர்

இந்நிலையில், சமூகமளித்த 20 உறுப்பினர்களின்  பூரண சம்மதத்தோடு 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக  சபையிலுள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் தலா 2.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது