தொல்புரம் மத்தி பகுதியில், சிறுவன் மீது கல் வீழ்ந்ததால், காயமடைந்த சிறுவன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
” இதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கஜிதரன் (வயது – 11) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த வீட்டில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு விளையாடிக் கொண்டிருந்தவேளை, சிறுவன் மீது கல் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

