தற்போதைய நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளால் நாடு தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் வழங்கிய வரிச்சலுகையினால் தற்போதைய காலநிலையிலும் வர்த்தகங்கள் உகந்த மட்டத்தில் இயங்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் 7.2 % வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் முரண்பாடுகளற்ற நாட்டையும் பெற்றது.
எவ்வாறாயினும், பொருளாதாரம் 2.2 % மாத்திரமே வளர்ச்சியடைந்த ஒரு நாட்டையே அவர்கள் பெற்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து நாடுகளுக்கும் சவாலாக இருக்கும் கொவிட்-19 நெருக்கடியை தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளாக சமாளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடியின் தொடக்கத்தில், கொவிட் -19 க்கு எதிராக தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் உலகம் முழுவதும் பணத்தை பிச்சை எடுப்பதாக தற்போதைய எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.
தற்போது பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிட்டத்தட்ட 70 % ஆன மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை சரியான பாதையில் திருப்புவதற்கு அரசாங்கம் சமாளித்துள்ளதாகவும், நாடு தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

