ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவு -கல்வியமைச்சர்

323 0

ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த சட்டமூலம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி உரிய தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைய அது வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.