வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் நேற்றிரவு (07) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது
இந் நிலையில் ஆலய நிர்வாகம் காவற்துறை முறைப்பாடு பதிவுசெய்த நிலையில் ஒட்டுசுட்டான் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

