ரயில் விபத்தில் தந்தை, தாய், மகன் பரிதாபமாக பலி

290 0

ஹட்டன், ரொசல்ல பகுதியில் ரயில் ஒன்றுடன் மோதுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் ரொசல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், தந்தையும் அவர்களின் புதல்வரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில்வே கடவையை கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது