நாட்டின் மாற்றுத் தலைவராக சஜித் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்: எஸ்.எம்.மரிக்கார்

260 0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் மாற்றுத் தலைவர் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மாத்திரமே அதிகாரம் உள்ளதாகவும், மாற்றுத் தலைவராக சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் ஏற்கனவே தெரிவு செய்துள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கை யிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.