2021 வாக்காளர் பட்டியலில் 30,000 க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள்!

293 0
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர்பாக 30,000க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

மாவட்ட உதவி மற்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 31 ஆம் திகதி சான்றளிக்கப்பட உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.