பணிஸின் விலையில் மாற்றம் இல்லை யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு

222 0

பணிஸின் விலை அதிகரிக்கப்படாததுடன் பாணின் விலை மாத்திரம் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

பாண் மற்றும் பணிஸ் விலைகள் அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும், யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்திற்கும் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய பாணின் விலையை மாத்திரம் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் பணிஸின் வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படாமல் விற்பனை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.