12 வயது மகளுடன் சேஷ்டை – காதை துண்டாடிய தந்தை!

200 0

12 வயதான மகளுடன் சேஷ்டை விட்ட அயலவரின் காதை அறுத்த தந்தை, வெட்டிக் காயப்படுத்தியும் உள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி, தருமபுரத்தில் நேற்று நடந்துள்ளது.

தாக்குதல் நடத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த தருமபுரம் பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்தனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம், அயலவர் ஒருவர் 12 வயதான சிறுமியுடன் சேஷ்டை விட்டுள்ளார் என்றும், அதை அறிந்த தந்தை அயலவர் மீது சரமாரியாக வெட்டித் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

தாக்குதலில் அயலவரின் காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர் தருமபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.