சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் அறிக்கை பெற தீர்மானம்!

300 0

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளை கருத்திற்க் கொண்டு அறிக்கை பெறப்படும் என இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்கான காரணத்தை ஆராய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து 20 தனிப்பட்ட மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கல்முனை, கேகாலை மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய இடங்களில் மூன்று சம்பவங்களும் நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ளன.