இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு மழை இல்லை

486 0

rural-development-in-india-3இலங்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட 70 சதவீத மழைவீழ்ச்சிதான் இலங்கைக்கு கிடைத்தது.

இந்த நிலையில், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதம் என்பது சாதாரணமாகவே குறைவான மழைவீச்சியைக் கொண்ட காலமாகும்.

எனினும், இந்த மாதங்களில் சாதாரண மழைவீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இது அமையாது.

மார்ச் மாத நடுப்பகுதியில்தான் இலங்கைக்கு மழை கிடைக்கக்கூடிய காலநிலை உருவாகும் என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.