முல்லைத்தீவில் மீண்டும் கனமழை தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில்!கடல் கொந்தளிப்பு

25 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூன்றாவது நாளாகவும் இன்றும்   கனமழை பெய்து வருகின்றது இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன  இதனால்  வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம் புகுந்து காணப்படுவதோடு வயல் நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பொழிந்துவரும் நிலையில் குளங்கள் பல வான் பாய்ந்து வருகிறது அத்தோடு கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதோடு கடும் காற்றும் வீசிவருகின்றது