பருத்தித்துறை மரக்காலையில் இருந்து சடலம் மீட்பு

254 0
பருத்தித்துறை, முதலாம் கட்டை சந்திப் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் இருந்து, இளைஞன் ஒருவரின் சடலம், இன்று  (25) அதிகாலை 2 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தும்பளை மேற்கு, பருத்தித்துறையைச சேர்ந்த சண்முகராஜா துஷ்யந்தன் (வயது- 21) என்பவராவார்.

சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு  உத்தரவிட்டார்.