மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

80 0

வெருகல் நாதன்ஓடை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (22) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வெருகல் பிரதேச இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெருகல் ஆற்றில் மணல் அகழ்வு இடம்பெறுவதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமங்கள் அழிவடையும் ஆபத்து உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டன.

இதன்போது வெருகல் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சி.முரளிதரனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.