தெற்கில் கொல்லப்பட்ட பிரேமவதி மனப்போி முதல் வடக்கின் இசைப்பிரியா வரை

135 0

தெற்கில் கொல்லப்பட்ட பிரேமவதி மனப்போி முதல் வடக்கின் இசைப்பிரியா வரையிலானவா்களின் நிலைமைக்கு நேற்று சந்தஹிரு செய நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சான்றாக அமைக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாாி விஜயரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடா்பில் இரண்டாம் வாசிப்பின் ஐந்தாம் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது முதலில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாாி விஜயரட்ன,

எதிா்க்கட்சியின் ஆா்ப்பாட்டத்தை தடுத்த அரசாங்கம், கோவிட் தொற்றுக்கு மத்தியில் “சந்தஹிரு செய” என்ற இராணுவ வீரர்களான நிகழ்வை அரசாங்கம் நேற்று நடத்தியிருக்கிறது. கோவிட் தொற்றுக்கு ஆா்ப்பாட்டமும் சமய நிகழ்வும் ஒன்றுதான் என்று அவா் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து லட்சமாக இருந்த அரசப் பணியாளா்களை அரசியல் நலன்கருதி அதிகரித்தமை குறித்து இதன்போது ரோஹினிகுமாரி குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, ”சந்தஹிரு செய” நிகழ்வின் நாட்டின் தலைவர் தமது மனைவிக்கு சமமான கதிரையை வழங்காதபோது எவ்வாறு நாட்டின் பெண்களுக்கு சமமான அதிகாரத்தை எதிர்ப்பாா்க்கமுடியும் என்று ரோஹினிகுமாாி விஜயரட்ன கேள்வி எழுப்பினார்.

உலகில் இன்று போா்ச் சின்னங்களை அகற்றி வரும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எனினும் இலங்கையில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படும் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு இதுவே உதாரணமாகும். இலங்கையில் போாின் காரணமாக கணவா்மாரை, பெற்றபிள்ளைகளை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளனர்,

நேற்று இடம்பெற்ற நிகழ்வுக்கு செலவிட்ட நிதியை அவர்களுக்கு வழங்கியிருந்தால், அதுவே போா் வீரா்களுக்கு செய்கின்ற கௌரவமாக இருந்திருக்கும் என்றும் ரோஹினிகுமாாி விஜயரட்ன குறிப்பிட்டார்.

தெற்கில் கொல்லப்பட்ட பிரேமவதி மனப்போி முதல் வடக்கின் இசைப்பிரியா வரையிலானவா்களின் நிலைமையை நேற்று சந்தஹிரு செய” நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்று ரோஹினிகுமாாி விஜயரட்ன சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இந்த பாதீடு, வர்த்த நோக்கத்தைக் கொண்டது. அத்துடன் தோ்தலை மையமாகக் கொண்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கிடையில், சீனாவின் கப்பல் தொடா்ந்தும் இலங்கையைச் சுற்றிக்கொண்டிருப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளார். இதில் வரும் நட்டங்களை அமைச்சர் சசீந்திர ராஜபக்சவே பொறுப்பேற்கவேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்தார்.

குருவைக் காப்பாற்றலாம். எனினும் குருவின் அண்ணனின் மகனை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகேவிடம் ரோஹினிகுமாாி விஜயரட்ன தொிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!