ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16)விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,போராட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் இப்படி பயப்படுகிறது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொரோனா வைரஸ் பரவலைக் காரணங்காட்டி அரசாங்கம் போராட்டங்களை அரசாங்கம் தடுத்து வருகிறது. நாட்டின் பெரும்பான்மை நீதிமன்றங்கள் தடைஉத்தரவை பிறப்பிக்க மறுத்துள்ள நிலையில், அதனை மதிக்காதுபோராட்டங்களுக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர் எனவும்
தெரிவித்தார்.
உரத் தடையின் பிரதிபலனை பெரும்போகத்துக்குப் பின்னர் பார்க்க முடியும்.நாட்டில் பாரிய பெரும் பஞ்சமொன்றுக்கு நாட்டு மக்களை அழைத்து செல்லும் செயற்பாடாகவே நாம் பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நாட்டில் இனவாதத்தையும், வெறுப்பையும் பரப்பும் பௌத்த பிக்குவை தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

