மதுபான கால் போத்தல்கள் தயாரிப்பதை தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய
அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபை நடத்திய ஆய்வில்கலந்துகொண்டவர்களில் 72 சதவீதமானவர்கள் மதுபான கால்போத்தல்களைத் தடைசெய்ய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்ததாக
அவர் மேலும் தெரிவித்தார்.
மது மற்றும் புகையிலை தொடர்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

