எரிபொருள் விலை சூத்திரத்தை கோருகிறார் அலி சப்ரி

247 0

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு மீண்டும் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கமும், நிதி அமைச்சரும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தான் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (16) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வழிகளை எவரும் முன்வைப்பதில்லை. இலங்கைக்கு எவரும் நிவாரணங்களை இலவசமாக வழங்குவதில்லை. அதற்குப் பின்னால் நிகழ்ச்சி நிரல் ஒன்று மறைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

75 வருடங்களாக நாட்டின் நீதித்துறைக்குக் கிடைக்க வேண்டிய முன்னுரிமை தற்போதுவரையில் கிடைக்கவில்லை. நாட்டில் சில சட்டங்கள் 100 வருடங்கள் பழமையானதாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்