திருகோணமலையின் பல பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

297 0

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக “அடுத்த அதிகாரம்” எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சுவரொட்டிகள் முன்னிலை சோசலிசக் கட்சியினால் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சுவரொட்டிகளில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மக்களோடுரையாடல் நவம்பர் 15 இலிருந்து நாடு பூராகவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கந்தளாய், சேருநுவர, முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், மற்றும் வட்டுக்கச்சி போன்ற பகுதிகளில் பெருமளவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Gallery