நீரிழிவு – மனநோயை குணப்படுத்தும் கண்ணீர் மரம்

256 0

பழங்குடி இன மக்கள் புற்றுநோய்க்கு வலி நிவாரணியாக இம்மரத்தின் வேர்களை கசாயம் தயாரித்து பயன்படுத்துகின்றனர்.

இயற்கையின் அற்புதங்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக பழமையான மரங்களை தேடி கண்டுபிடித்து ஆராய்ந்து வருகிறது. பல்லடத்தை சேர்ந்த தாவரவியல் ஆர்வலர் மாணிக்கம் தலைமையிலான குழு. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மரங்களில் ஒன்று ‘கண்ணீர் மரம்‘.
இதுகுறித்து தாவரவியல் ஆர்வலர் மாணிக்கம் கூறியதாவது:
காரணம்பேட்டை அருகே சங்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள ‘கண்ணீர் மரம்‘ பல்வேறு அற்புதங்களை கொண்டுள்ளது. கடும் வறட்சியையும் தாங்கி பசுமை மாறாமல் வளரக் கூடியது. கடினமான பாலிமர் செல்களுடன் காணப்படும் இம்மரம் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது.
மரத்தின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் புகை மூலம் ‘ஹிஸ்டீரியா’ என்ற மன நோய் குணப்படுத்தப்படுகிறது. மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கசப்பு கலந்த இனிப்பு சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
பழங்குடி இன மக்கள் புற்றுநோய்க்கு வலி நிவாரணியாக இம்மரத்தின் வேர்களை கசாயம் தயாரித்து பயன்படுத்துகின்றனர்.மழைத்துளிகள் இலைகளில் வடிந்து சொட்டு சொட்டாக கண்ணீர் துளிகள் போல் விழுவதால் இம்மரம் கண்ணீர் மரம் என அழைக்கப்படுகிறது.
இது அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு சேமிக்கும் திறன் பெற்றது. பறவைகளின் சொர்க்கபுரியாகவும், சிறிய பாலூட்டிகளின் இருப்பிடமாகவும், மயில் ஆடுகளின் கால்நடை தீவனமாகவும் இதன் பழங்கள் பயன்படுகின்றன.
இது போன்ற எண்ணற்ற அரிய வகை மரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. சிறப்புமிக்க இம்மரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.