பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

136 0

நெல்லியடி நகர் பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்தை சேதப்படுத்தியமை மற்றும் உடமையில் கஞ்சா வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ், ஒருவர்,  நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒற்றை நாள்களில் வாகனம் நிறுத்தக் கூடாத சந்தர்ப்பத்தில், வாகனத்தை நிறுத்தியமை தொடர்பில் மேற்படி வாகன சாரதி ஒருவருக்கு, பொலிஸார் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு பதிலாக , பொலிஸாரினால் வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரத்தை வழங்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர், குறித்த துண்டுச்சீட்டினை கிழித்து எறிந்ததுடன், பொலிஸாரை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து, குறித்த நபர் உடனடியாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

அவரை சோதனை செய்த பொழுது, உடமையில் இருந்து ஒரு கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.