முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்ட திட்டங்கள்

320 0

397671837Threeமுச்சக்கர வண்டி தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பயணிகள் போக்குவரத்துக்கு பயன்டுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் சாரதி ஆசனத்திற்கு பின்புறமாக வாகனத்தின் பதிவிலக்கம், சாரதியின் பெயர், சாரதியின் புகைப்படம் என்பன காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்தின் போது குறுகிய வீதிகளினூடாக பயணிப்பதற்கு சாரதி கடமைப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரின் கையொப்பத்துடன் மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஜனவரி 09ம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2001/2 என்ற இலக்கத்தினுடைய விஷேட வர்த்தமானி அறிவித்தலின்படி கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படுவதும் சாரதிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவை தவிர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகள் தொடர்பிலும் மேலும் பல விதிமுறைகளை உள்ளடக்கியதாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.