மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் 12,000 குடும்பங்கள் அடையாளம்

137 0

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அபாய வலயத்திற்குள் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே மண்சரிவு அபாய வலயத்திற்குள் மக்கள் வசிப்பதாக அவர் கூறினார்.

இவ்வாறானவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயமானது எனவும் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர சுட்டிக்காட்டினார்