சுகாதார அமைச்சினால் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை

255 0

634890957rajithaகண் வில்லை தொடர்பான அறுவை சிகிச்சைக்கான வில்லைகள் மற்றும் மாரடைப்பு நோய்க்கான ஸ்டென்ட் போன்றவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்யுமாறு தெரிவிக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி போன்ற நகரங்களின் போதனா வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, வைத்தியர்களால் இத்தகைய அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக, சுகாதார அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இத்தகைய செய்கையினால் வைத்தியர்களுக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து தரகு பணம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நோயாளிகளுக்கு பலவகையான சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.