பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் -வைத்தியர். சித்திரமாலி டி சில்வா

301 0

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது முக்கியம் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர். சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சிறுவர்களுக்கு தொடர்ந்து கற்பிக்கப்பட வேண்டும்.

பல மாதங்கள் வீட்டில் இருந்த பின்னர் சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பிள்ளைகள் உடல் நலனை விருத்தி செய்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறுவர்களுக்கு சமூக இடைவெளி தொடர்பில் பயிற்றுவிப்பதிலும், எல்லா நேரங்களிலும் கைகளை கழுவுவதிலும் பெற்றோர்களின் பங்களிப்பு தொடர்பிலும் அவர் வலியுறுத்தினார்.