தொழிற்சங்க நடவடிக்கை மற்றுமொரு பொது முடக்கலுக்கு வழிவகுக்கும்: வசந்த யாப்பா

245 0
தொழிற்சங்க நடவடிக்கைளைகள் கொவிட் 19 தொற்றின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான வசந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்காமல் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினர் நாட்டின் பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுக்கப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.