மீபிலிமான விவசாயத் திணைக்களத்தில் உரிய வசதிகளின்மையால் பசுக்கள் இறப்பு

585 0

விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா மீபிலிமான அரச விதை உருளைக்கிழங்கு நிலையத்தில் சுமார் 45 வருடங்களுக்கு மேலான மாட்டுப் பண்ணையே இதுவாகும். இங்கு சுமார் 20 பசு மாடுகள் உட்பட சுமார் 54 கால் நடைகள் உள்ளன.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 லீற்றர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. இங்கு இக் கால்நடைகளின் கழிவுகள் விவசாயத்துக்கான உரமாக பயன் படுத்தப் படுகின்றன. ஆயினும் கால்நடைகளுக்குத் தேவையான புற்கள் மிக மிகக் குறைவு அத்தோடு கால் நடைகளுக்குத் தேவையான ஏனைய ஊட்டச் சத்துக்கள்,உணவுகள் முறையாக கிடைப்பதில்லை.

கால்நடைகளின் இருப்பிடம் உடைந்தும் மழைக் காலங்களில் நீர் நிரம்பியும் காணப்படுகிறது. இதனால் வருடத்தில் சராசரியாக 3ற்கு மேல் கால் நடைகள் இறக்கின்றன. எனவே இவற்றை புனரமைப்பு செய்து சகல வளங்களும் வழங்கப்படுமாயின் சிறந்த பாற்பண்ணையாக மாற்ற முடியும். அத்தோடு நிரந்தர தொழில் இல்லாத இளைஞர்,யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்பையும் வழங்கலாம் என விவசாய பொதுச் சேவை சங்க நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பாஸ்கர் தெரிவித்தார்.