உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; மூவர் காயம்-5 வீடுகளுக்குச் சேதம்

174 0

உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

இன்று (04) காலை வெலிகம, அவரிவத்தையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உணவகம் மற்றும் அருகிலுள்ள ஐந்து வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹோட்டலின் சமையலறையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த அவ்விடத்தின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அயலவரான பெண் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.