அம்பாறை, பாணாம கமநல கேந்திர நிலையத்தில் இருந்த பொத்துவில் நாவலாறு தெற்கு பிரதேச காணிகள் தொடர்பான சகல ஆவணங்களும் பொத்துவில் கமநல கேந்திர நிலையத்துக்கே மாற்றப்பட்டுள்ளன.
பல வருடங்களாக பொத்துவில் பிரதேச விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டு வந்த நாவலாறு தெற்கு பிரதேச காணிகள் தொடர்பான சகல ஆவணங்களும் பாணம கமநல கேந்திர நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தன.
இதனால் பொத்துவில் கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட விவசாயிகள் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டு வந்ததையடுத்து, இது தொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷரபின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் முஷரபின் வேண்டுகோளுக்கினங்க, கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தால் பாணாம கமநல கேந்திர நிலையத்தில் இருந்த நாவலாறு தெற்கு விவசாயிகளின் சகல ஆவணங்களும் பொத்துவில் கமநல கேந்திர நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான தீர்வை பெற்றுக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, பிரதேச விவசாய அமைப்புக்கள் நன்றி தெரிவித்துள்ளன.

