அரசாங்கம் ஒரு புறமும், நாட்டு மக்கள் மறு புறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் – அத்துரலிய ரத்ன தேரர்

312 0
அரசாங்கம் ஒரு புறமும், நாட்டு மக்கள் மறு புறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை முன்னெடுப் பதற்கான முடிவு தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையத் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்யை தினம் புறக்கோட்டையில் இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ எனும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தவறுகளைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்குள்ளது. தேசிய பொருளாதாரம், இறையாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.