இந்நாட்டிலுள்ள எந்தவொரு சொத்தையும் விற்பதற்கு அல்லது வேறு நாட்டிற்கு விற்பனை செய்வது அரசாங்கத்தின் குறிக்கோளல்ல- அர்ஜீன ரணதுங்க

238 0

arjuna-ranathunga-10-01-2017-3ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும்போது, நாட்டிற்கு நன்மைபயக்கும் செயற்பாடுகளையே முதன்மைப்படுத்தி மேற்கொள்ளவுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு தேர்வுபெற்ற துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலீட்டாளர்களை வரவழைக்கும் பொழுது நாட்டிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முன்னெடுக்க தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாக, அமைச்சர் அர்ஜூன அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க,

….துறைமுகத்தை மாத்திரமன்றி இந்நாட்டிலுள்ள எந்தவொரு சொத்தையும் விற்பதற்கு அல்லது வேறு நாட்டிற்கு விற்பனை செய்வது அரசாங்கத்தின் குறிக்கோளல்ல.

நானும் என்னுடைய பிரதி அமைச்சரும் எந்தவொரு சொத்துக்களையும் விற்பதற்கு விரும்பவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் அந்நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பொருட்டு முதலீட்டாளர் ஒருவரை தேடிக்கொள்ளும் பொருட்டு நாம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இன்று எமக்கு இரு முதலீட்டாளர்கள் கிடைத்துள்ளார்கள். அவற்றுள் செயலாளர்கள் குழுவினால் ஒரு முதலீட்டாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அது தொடர்பாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  கடந்த காலத்தில் அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தாங்கள் நன்கறிவீர்கள். அம்பாந்தோட்டையை விற்று விட்டோமென கூறினார்கள் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன என்றார்கள். அவ்வாறானதோர் எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் பொழுது  சீன முதலீட்டாளர் 198 ஆண்டு குத்தகைக்கு தருமாறு செயலாளர்கள் குழுவிடம் கோரினார்கள்.  ஆனால் 99 ஆண்டுகளிற்கு குத்தகைக்கு விடும் பொருட்டு தற்சமயம் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 50 ஆண்டுகளிற்கு குத்தகைக்கு விட வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாகும். எங்களுடைய உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒரு போதும் தயாரில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருகைத்தரும் முதலீட்டாளர்கள் வருகைத்தருவார்கள் என எம்மால்  காத்துக்கொண்டிருக்கலாம். அவ்வாறுச் செய்தால் இன்னும் 200 ஆண்டுகளிற்கேனும் எம்மால் இக்கடனை திருப்பிச் செலுத்த இயலாது. வெறுமனே கடன் தொகையை மற்றும் வட்டியை மாத்திரமே செலுத்த நேரிடும்.

அதனை திருப்பிச் செலுத்துவது எவ்வாறு ? கொழும்பு துறைமுகம் ஈட்டிக்கொள்ளும் இலாபத்தின் பெரும் பங்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பொருட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த செலவிடப்படுகின்றது. இக்கடன் மற்றும் வட்டி தொகையினை செலுத்துவதற்கு கொழும்பு துறைமுகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் போதுமானதாக இல்லையாயின் நாம் நிதி அமைச்சிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்ள நேரிடும். அப்பொழுது உங்கள் மீது பெருந்தொகை வரிச்சுமையினை திணிக்க வேண்டும். ஏனெனில் எங்கிருந்தாவது நாம் இப்பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே இந்நிலை காரணமாகவே நாம் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கின்றோம். பிரதி அமைச்சர் கூறியதைப் போன்று இன்று முதலீட்டாளர் மிகவும் கலவரமடைந்துள்ளார். மிக விரைவாக ஒப்பந்தத்தை கைச்சாத்திட முயல்கின்றார். நாம் கலவரமடையவில்லை. இவ்வொப்பந்தத்தை சரியான முறையில் கைச்சாத்திடுவதே எங்களுடைய தேவையாகும். ஒப்பந்தத்தை கைச்சாத்திட முன்னர் பணத்தை முதலீடுச் செய்வதற்கு எந்த முதலீட்டாளர் முன்வருவார். நாம் என்ன சொன்னாலும் அம்பாந்தோட்டை துறைமுகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும்.

எனவும் குறிப்பிட்டார்.

மாபொல பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தேர்வுபெற்ற துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வில், கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம, இலங்கை துறைமுக அதிகார சபையின் நிறைவேற்று அத்தியட்சகர் சன்ஜீவ விஜயரத்ன உள்ளடங்கிய பல விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்.