பலுசிஸ்தானில் பாக். படைகள் திடீர் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

238 0

201701110042161278_6-killed-as-pakistan-forces-resort-to-unprovoked-firing-in_secvpfபலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் படைகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

பலுசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.

தனிநாடு கோரி போராடி வரும் குழுக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வவ்போது தாக்குதலில் ஈடுபட்டு வருவதோடு, பலரையும் நாடு கடத்தியுள்ளனர்.இந்நிலையில், பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் படைகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். டெரா பக்டியில் உள்ள உச் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இது குறித்து பலோச் குடியரசு கட்சியின் மத்திய செய்தி தொடர்பாளர் கூறுகையில், பலுசிஸ்தான் முழுவது பாகிஸ்தான் படைகளின் அட்டூழியம் தொடர்வதாக தெரிவித்தார்.முன்னதாக பாகிஸ்தான் படைகள் வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் பணியில் 70 பெண்கள், 40 குழந்தைகள் உட்பட 250-க்கும் அதிகமான மக்கள் அந்த கிராமங்களில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டனர். 70-க்கும் அதிகமான குடிசைகள் கொளுத்தப்பட்டன.