மன்னார், பேசாலை பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 17 கிலோ கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
08 பொதிகளில் இருந்து 17 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா தொகை, தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒழுங்குப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தீயிட்டு அழிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


