முருங்கையிலிருந்து மருந்து தருகிறது கியூபா

264 0
முருங்கைக் காயிலிருந்து (விஞ்ஞானப் பெயர்; மோரிங்கா ஒலிஃபெரா) மருத்துவப் பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்துடன் இலங்கைக்கு உதவ கியூபா முன்வந்துள்ளது.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்செலோ கோன்சலஸ் கேரிடோ இதைத் தெரிவித்துள்ளார்.

முருங்கை மரங்களின் பண்புகளிலிருந்து மருத்துவ குளிசைகள் மற்றும் தூளை உற்பத்தி செய்வதாக கியூப தூதுவர் குறிப்பிட்டார்.

முருங்கை மிகுதியாக வளரும் இலங்கைக்கு இத்தகைய தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என்றார்.

இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே பரிமாற்றங்களை ஊக்குவிப்பது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஸ்பானிய மொழி கற்பிப்பதை ஊக்குவிக்க கியூபாவிடம் அமைச்சர் தினேஷ் குணவர்தன உதவி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.