சிறைச்சாலைக்குள் தொற்று நீக்கி திரவ பயன்பாட்டுக்கு தடை!

176 0

சிறைச்சாலைகளுக்குள் தொற்று நீக்கும் திரவத்தைக் கொண்டு செல்வது கடந்த வார இறுதியிலிருந்து  இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இரண்டு ஈரானிய கைதிகள் தொற்று நீக்கியை பருகி உயிரிழந்ததையடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய கைதிகள் சிலர் கடந்த 14 ஆம் திகதி தொற்று நீக்கும் திரவத்தைப் பருகிய நிலையில், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறைச்சாலைகளில் தற்போது தொற்று நீக்கிக்கு பதிலாக சவர்க்காரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.