முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன அரசியலில் உத்தியோகபூர்வமாகக் களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக தஹாம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கூட்டமொன்று நேற்றைய தினம் மின்னேரிய பிரதேசத் தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



