168 பாடசாலைகள் திறக்கப்பட உள்ளன

266 0
எதிர்வரும் 21ஆம் திகதி 200க்கும் குறைவான  மாணவர்களைக் கொண்ட  பாடசாலைகள் ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

அதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நான்காம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில் சிரமதானம்  கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலை வகுப்பறை மற்றும் பாடசாலை வளாகம் என்பன தூய்மைப்படுத்தப்பட்டது.  அத்துடன்  வகுப்பறை மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளதாகவும்  பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு  2 வாரங்கள் மாணவர்களது உளவளத்துணை தொடர்பான செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார் .
இச் சிரமதான நிகழ்வில் திருகோணமலை நகர சபை தவிசாளர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ,திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் ,அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.