கிளிநொச்சி டிப்போ சந்தியில் குடைசாய்ந்த கனரக வாகனம்

321 0
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று காலை 9 மணியவில் கனரக வாகனமொன்று ( ரிப்பர் ) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

வவுனியாவிலிருந்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இவ்விபத்தினால்  எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.